
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வீடுகள் பல தண்ணீரில் மூழ்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று 18 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதாவது அங்க கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக விஜயவாடா-காசிபேட் இடையே ராயனப்பேடு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் ஹைதராபாத்தில் இருந்து தாம்பரம் வரும் சார்மினார் ரயில், சென்னை சென்ட்ரல்-ஷாலிமார் கோரமண்டல் ரயில், சென்ட்ரல்-டெல்லி ஜிடி ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக இன்று 18 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.