இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதன் இறுதி விசாரணையை இன்று தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

அதாவது சிவில் வழக்குகள் முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் அந்த சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் உள்ளிட்ட 15 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் விரைவில் இரட்டை இலை சின்னம் மீதான வழக்கில் தீர்வு காணப்படும் என்று நம்பப்படுகிறது.