தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரை மாற்றி அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். தூத்துக்குடியின் தவெக மாவட்டச் செயலாளராக இருந்த பில்லா ஜெகன், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு சுமன் என்பவரை புதிய மாவட்ட செயலாளராக விஜய் நியமித்திருக்கிறார். கட்சி தொடங்கி ஒரு வாரத்தில் முக்கிய பிரமுகர் வெளியேறியிருக்கிறார்.