
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 பாம்பன் மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 16ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 18 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் மீது இலங்கை மன்னார் மின்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் விடுவிக்கப்பட்டனர்.