
இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டா மூலம் பழகிய 17 வயது பெண்ணை தனது வலையில் வீழ்த்திய வருண் குமார், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 5 வருடங்களாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது திருமணம் செய்ய மறுப்பதால், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பெங்களூரு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.