
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் இன்று உடல்நல குறைவினால் காலமானார். இவர் புதிய தேசிய கல்விக் கொள்கையை தயாரித்த குழுவின் தலைவராக செயல்பட்டவர்.
இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் தற்போது பெங்களூருவில் உடல்நல குறைவால் மரணமடைந்தார்.மேலும் இஸ்ரோ முன்னாள் தலைவரின் மறைவு தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.