
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதைத் தொடர்ந்து, ஈரோடு மாநராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயர் அறைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன அரசியல் தலைவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மறைக்கப்பட்டன.