
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வருடம் உடல் நலக்குறைவினால் காலமானார். இதன் காரணமாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் விசி சந்திரகுமார் போட்டியிட நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.
பிற முக்கிய கட்சிகள் எதுவும் போட்டியிடாத நிலையில் முதல் முறையாக திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி என்பது உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த பட்டியலில் இருந்த வெளி மாநில வேட்பாளரின் பெயரை தற்போது தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. மேலும் இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 பேர் போட்டியிடுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.