
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் வரை இருக்கும் நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும். இந்த தேர்தலில் இந்த முறை திமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஒருமனதாக முடிவு செய்து திமுக களமிறங்க முடிவு செய்துள்ளதாக செல்வப் பெருந்தகை அறிவித்தார். இந்நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் விசி சந்திரகுமார் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் விசி சந்திரகுமார் கடந்த 2011 முதல் 2016 வரை ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவெரா திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவின் காரணமாக இறந்து விட்டதால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. அவருடைய தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவரும் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதால் தற்போது அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.