ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன்படி நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.