உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சந்திர சூட் இருந்த நிலையில் அவருடைய பதவிக்கால் முடிவடைந்துவிட்டது. இதனால் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா தேர்வு செய்யப்பட்டார். இவர் உச்ச நீதிமன்றத்தின் 51 வது தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று பதவி ஏற்பதாக கூறப்பட்டது.

அதன்படி தற்போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சஞ்சீவ் கண்ணாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். மேலும் இவர் தற்போது உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.