
தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 முதல் 90 நாட்களுக்குள் அனைத்து வகை மசோதாக்கள் மீதும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். 10 மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள 10 மசோதாக்களின் விவரம்:
- ஆளுநர்களுக்கு பதில் முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தர்களாகுவதற்கான மசோதா.
- கால்நடை பல்கலைக்கழக திருத்த மசோதா.
- மீன்வளப் பல்கலைக்கழக திருத்த மசோதா.
- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சரை வேந்தர் ஆக்குவதற்கான மசோதா.
- தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சரை வேந்தர் ஆக்குவதற்கான மசோதா.
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா.
- தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா.
- தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் 2-ஆம் திருத்த மசோதா.
- கால்நடை இரண்டாம் திருத்த மசோதா.
- மீன்வள பல்கலைக்கழக 2-வது திருத்த மசோதா.