தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது இனி தன்னை எந்தவித அடைமொழிகளும் இல்லாமல் அனைவரும் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதாவது என்னை இனி கமல்ஹாசன் என்றோ அல்லது கமல் KH என்று மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று தெரிவித்துள்ளார்.

என் மீது கொண்ட அன்பின் காரணமாக பலர் உலகநாயகன் உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறார்கள். இந்த பட்டங்களை நினைத்து நான் பெருமிதம் அடைகிறேன். மேலும் மேலே குறிப்பிட்ட பட்டங்களை வழங்கியவர்களுக்கு எந்தவித மரியாதை குறைவும் வந்து விடாத வண்ணம், அந்த பட்டங்கள் அனைத்தையும் துறப்பதே சிறந்தது என்று கூறியுள்ளார்.