தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற பகுதியில் நடைபெறும் நிலையில் தற்போது அதனை முன்னிட்டு நடிகர் விஜய் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நம் கழகத்தின் வெற்றி திருவிழாவை முன்னிட்டு நான் எழுதும் மூன்றாவது கடிதம் இது. அதில் மாநாடு நடைபெறும் இடம் மற்றும் நெருங்கும் நாள் என் மனதில் வந்துவிட்டது. உங்கள் ஒருவரையும் நேரில் சந்திக்கப் போகும் தருணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் தருணங்களை மேம்படுத்தப் போகிறது.

இந்த மாநாட்டை உச்சபெற்ற அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாட வேண்டும். அந்த திருவிழாவை கொண்டாடுவதற்காக பெருந்திரளாக ‌ மாநாட்டுக்கு வருவோர் பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வாருங்கள். நம்முடைய கழக கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி கொண்டு வாருங்கள். உங்களின் வருகைக்காக வி.சாலையின் எல்லையில் என்னுடைய கைகளை விரித்தபடி இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன். மேலும் 2026 இலக்கை நோக்கி முதல் வெற்றி படியை எடுத்து வைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.