
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுள்ளார். இவர் பதவியேற்றதும் அமெரிக்காவிற்கு பொற்காலம் தொடங்கி விட்டதாக அறிவித்த நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டும்தான் இனி அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படுவார்கள் என்று கூறிய அவர் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறினார். இந்நிலையில் தற்போது உலக சுகாதார மையத்தில் இருந்தும் அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இவர் அமெரிக்காவின் அதிபராக முன்பு பொறுப்பேற்றபோதும் இறுதியில் உலக சுகாதாரம் மையத்தில் இருந்து வெளியேறினார். அதாவது அமெரிக்காவிடமிருந்து பெரும் நிதியை பெற்றுக் கொண்ட போதிலும் கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களை உலக சுகாதார நிறுவனம் சரியான முறையில் கையாளவில்லை என்று டிரம்ப் தொடர்ச்சியாக கூறி வந்தார். மேலும் இந்த நிலையில் தற்போது உலக சுகாதார மையத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.