உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோண்டா அருகே சண்டிகர்-திப்ரூகர் ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 10 முதல் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மாநிலம் மீட்பு குழுவினர் மற்றும் தேசிய மீட்பு குழுவினர் இணைந்து மீட்டு வருகிறார்கள். இந்நிலையில் ரயில் விபத்தில் தற்போது 4 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த காயங்களுடன் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.