அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்வதாக தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தொகுதி நிதியை தயாநிதிமாறன் தவறாக பயன்படுத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் இதே போன்று கே.சி பழனிச்சாமி தொடர்ந்த மற்றொரு வழக்கில் இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.