தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன். இவர் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். இவர் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு சொந்தமான கல்லூரிகள் முசிறியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் இவருக்கு சொந்தமான கல்லூரிகள் திருச்சியில் உள்ள நிலையில் எம்ஐடி பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நேற்று முன்தினம் காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ள நிலையில் இன்றும் சோதனை தொடர்கிறது.

மேலும் கோவையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் இரு குழுக்களாக பிரிந்து தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.