தமிழக அமைந்துள்ள உள்துறை மந்திரி அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள் உடன் இருந்தனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இந்த சந்திப்பின்போது அமித்ஷா பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்திவிட்டார். அதோடு இந்த கூட்டணி புதிது கிடையாது என்றும் ஏற்கனவே இயல்புதான் என்றும் அவர் கூறினார்.

அதன்பிறகு தமிழகத்தில் பாஜக கட்சியின் வளர்ச்சிக்கு அண்ணாமலை சிறப்பாக பங்காற்றியதால் அவர் தேசிய அரசியலுக்கு செல்வார் என்றார். இதைத்தொடர்ந்து புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்பார் என்று அறிவித்தார்.

இந்நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் யார் யாருக்கு எத்தனை சீட் என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் கூட்டணி என்றும் அமித்ஷா உறுதியாக கூறினார். அதோடு திமுகவின் ஊழல் பற்றி அவர் கடுமையாக விமர்சித்த நிலையில் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறினார்.