ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டது. இருப்பினும் முதல்வராக எடப்பாடி பழனிச்சியும் துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வம் இருந்து 4 வருட ஆட்சியை முடித்தனர். அதன் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரிக்கவே ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இது தொடர்பாக நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுகவினர் பெரும்பான்மை ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பிறகு இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேஷ் பழனிச்சாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இந்த வழக்கு இன்று  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அந்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது