துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்தது. அந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கூறி வந்தனர். இந்த சூழலில் வருகிற 25, 26 தேதிகளில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படும் என ஆளுநர் மாளிகை அதிரடியாக அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் நடத்துவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 25, 26 தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் தொடங்கி வைக்கிறார்.

உதகையில் நடக்கும் மாநாட்டில் பல்கலைகழக துணை வேந்தர்கள் பங்கேற்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்பார்கள். பல்துறை வல்லுநர்களும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை மீறி ஆளுநர் ஆர்.என் ரவி மாநாட்டை நடத்துவதில் உறுதியாக உள்ளார்.