
செந்தில் பாலாஜி வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரான நிலையில், அமலாக்கத்துறை அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. கபில் சிபல் 3வது நீதிபதி முன் வாதங்களை வைத்து கொண்டிருந்த அதேவேளையில், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், செந்தில் பாலாஜி வழக்கில் என்ன நடக்கப்போகிறது என்பதே தெரியாத சூழல் உள்ளது.