கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் சோதனை செய்ய சென்ற ஐடி அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த அதிகாரிகள் நான்கு பேர் கரூர் அரசு மருத்துவமனை ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அசோக் குமாரின் வீட்டில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் நேரடியாக கரூரில் விசாரணை நடத்தி வருகிறார்.