
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் கே.டி சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவான் உள்ளிட்ட ஏழு மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நாளிதழ் பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கே.டி ராமராவ் கூறியதாவது, உரிமைகளை காக்கும் போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பு என்பது ஏற்றத்தாழ்வுகளை கொண்டது. தென் மாநிலங்களுக்கு எதிரான அநீதி என்பது புதிது அல்ல.
ஒன்றிய அரசு பிக் பிரதராக செயல்பட வேண்டுமே தவிர, பிக் பாஸாக செயல்படக் கூடாது. சிலர் இப்போது ஏன் இப்ப பிரச்சனையை பேசுகிறீர்கள் என கேட்கிறார்கள். இதை இப்போது பேசாவிட்டால் வரலாறு எங்களை மன்னிக்காது என கூறியுள்ளார்.