
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1520 வரை சரிவடைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 190 ரூபாய் வரை குறைந்துள்ளது.
இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6650 ஆக இருக்கிறது. அதன் பிறகு 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1520 வரை குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.53,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.