
இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க திட்டமிட்டுள்ளது. அதாவது ஆட்கள் பற்றாக்குறையை குறைப்பதற்காகவும், விபத்துகளை தடுப்பதற்காகவும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் 65 வயதுக்கு உட்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முந்தைய பணிக்காலத்தில் 5 வருடங்கள் பணிபுரிந்த நன்னடத்தை சான்று பெற்ற, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாத ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள்.
அதன்படி 65 வயதுக்கு உட்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்களை ரயில்வே லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பு பணியாளர், ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள் போன்றவைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த உத்தரவு ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பலரும் கூறுகிறார்கள்.