காங்கிரஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக இருந்த எம் பி ரஞ்சன்குமார் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அவருக்கு கீழ் பணியாற்றிய கட்சி நிர்வாகிகள் , புதிய உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது பதவி நீக்கத்திற்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதனால் இவரும் விஜயதரணியை தொடர்ந்து கட்சி தாவுகிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது.