நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை 12-15% உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் உயர்த்துவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.179ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 199 ரூபாய் ஆகவும், 84 நாள்களுக்கு ரூ.455 ஆக இருந்த கட்டணம் 509 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 1GB ரூ.265 பிளான் 299ரூபாய் ஆகவும், 1.5GB ரூ479 பிளான் ரூ.579ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.