தமிழ்நாட்டில் தொடர் கனமழையால் கடந்த 5 நாள்களில் (மே 16-20) 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, குமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளதாகவும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.