
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் இருந்து மழை பெய்து வரும் நிலையில், இனி கனமழை வெளுத்து வாங்கப்போகிறது. இதனால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.