தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்கனவே நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு தற்போது விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டத்தை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.