கனமழை எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 9ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் சிரமத்தை குறைப்பதற்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை நடைபெற இருந்த வேலூர் திருவள்ளுவர் பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.