தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மதுரை, திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தொடர்ந்து திருப்பூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் நீலகிரியில் உள்ள 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த மூன்று மாவட்டங்களுக்கும் அடுத்தடுத்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.