கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 2 அல்லது 3 தொகுதிகளில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரு, கோலார் ஆகிய பகுதிகளில் உள்ள தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுப்பெற அதிமுக முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்ற வரலாறு உள்ளது.