
ஒன்றிய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட நிதி வராத பட்சத்தில் திட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒன்றிய அரசு நிதி தராமல் இருப்பது தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கும் மிரட்டலாக தான் பார்க்கிறோம். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுங்கள். எங்கள் பிள்ளைகளை நாங்களே வளர்த்துக் கொள்கிறோம். நிதி சுமையை தமிழ்நாடு அரசு ஏற்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.