பள்ளி பெயர்களில் நன்கொடையாளர்கள் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும். சாதி பெயர் இடம் பெறக் கூடாது. கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாதி பெயரை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு நடத்தும் கள்ளர், ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயரை அரசு பள்ளி என்று மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என பதிவாளர்களுக்கு பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.