
பாலிவுட் நடிகை மற்றும் முன்னாள் அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று மார்ச் 26, 2025 அன்று மும்பையில் கார் விபத்தில் சிக்கினார். அவரது காரை ஒரு பெரிய சிவப்பு பேருந்து இடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் ஒரு பப்பராசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது. வீடியோவில் பேருந்து அவரது காரை மெதுவாக மோதி சென்றதைக் காணலாம். சம்பவத்தின்போது ஐஸ்வர்யாவின் பாதுகாப்பு குழுவினர் காரைச் சுற்றி நின்று நிலைமையை மதிப்பீடு செய்தனர்.
அதிர்ஷ்டவசமாக, காருக்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை, அத்துடன் ஒரு சிறிய உரையாடலுக்குப் பிறகு அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக முழுமையான வெளியாகாத நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.