
சென்னையில் உள்ள அண்ணா சாலையில் டிஎம்எஸ் மெட்ரோ ரயில்வே நிலையம் அருகே இரு இளைஞர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மீது திடீரென எதிர்பாராத விதமாக பைக் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பைக்கில் இருந்த வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொரு இளைஞர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த வாலிபர்களின் கையில் தவெக கொடி இருந்த நிலையில் அவர்கள் சென்னையிலிருந்து விக்கிரவாண்டிக்கு பைக்கில் சென்றதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜயின் முதல் மாநாடு என்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் நிலையில் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் முன்னதாக நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு வருபவர்கள் தயவு செய்து பைக்கில் மட்டும் வர வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் நேற்று முதல் இருமுறை பைக்கில் வர வேண்டாம் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது பைக் விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.