உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் மலைச்சரிவிலிருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பேருந்தில் மொத்தம் 40 பேர் சென்ற நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நைனி டண்டாவில் இருந்து ராம் நகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலை சரிவில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.