கடலூர் மாவட்டம் ராமாபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேரு, கல்பனா மற்றும் சரண்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நேரு உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.