சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 53,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன் பிறகு ஒரு கிராம் 6705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை 57,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 93 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 93 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கிறது.