ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் இன்று காலமானார். உச்ச நீதிமன்றம் விடுவித்த நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் தேசிய உணர்வாளர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.