
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோன்று ஒரு சவரன் 160 ரூபாய் அதிகரித்து 56 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது தங்கத்தின் விலையில் புதிய உச்சமாகும். அதே சமயத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 98 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.