அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பணியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.