தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி. இவர் தமிழ் சினிமாவின் இயக்குனரும் ஆவார். கிருத்திகா வணக்கம் சென்னை உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்து மருமகளான கிருத்திகா பெயரில் சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளிக்கு தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ஆசிரியர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று  சோதனை நடத்தியதில் அது புரளி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இமெயில் மூலமாக கிருத்திகா உதயநிதி பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.