
ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது. ஆடவர் குண்டு எரிதலில் 20.36 மீட்டர் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங். தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்றதன் மூலம் இந்தியா மொத்தம் 13 தங்கத்தை இந்த ஆசிய கோப்பையில் வென்றுள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.