குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் பல்வேறு இடங்களில் இன்னும் தேர்வு தொடங்கவில்லை. இந்நிலையில், தாமதம் ஏற்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எத்தனை நிமிடம் தாமதமாக தொடங்குகிறதோ அதற்கேற்ப கூடுதல் நேரம் வழங்கப்படும்; எனவே, தேர்வர்கள் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.