
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்பொழுது கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.