
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர்..
கோடநாடு கொலை வழக்கில் தமிழக அரசை கண்டித்து ஓபிஎஸ் நடத்த உள்ள போராட்டத்தில் அமமுக பங்கேற்க உள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த கோரி ஓ பன்னீர் செல்வம் நடத்தும் போராட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்கிறார்.. ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அமமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஓ பன்னீர்செல்வத்துடன் டிடிவி தினகரன் பங்கேற்பார் என அமமுக அறிவித்துள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது.@OfficeOfOPS @TTVDhinakaran pic.twitter.com/PlJptcIzcB
— AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM (@ammkofficial) July 24, 2023