
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே லாரி மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னக்காம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையை கடந்த இருவர் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரை சிறைபிடித்த பொது மக்கள், அவரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மக்களை சமாதானம் செய்தனர்